×

தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பிப்ரவரி 20-ம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகாலையில் பனிமூட்டம் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.



Tags : Tamil Nadu ,Puducherry ,Meteorological Inspection Centre , Tamil Nadu, Puducherry, Dry, Weather, Center, Information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்