×

கடமலைக்குண்டு பகுதியில் கரம்பை மண் தட்டுப்பாடால் செங்கல் விலை கிடுகிடு உயர்வு: தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

வருசநாடு: கடமலைக்குண்டு பகுதியில் ஏராளமான செங்கல் காளவாசல்கள் இயங்கி வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் செங்கல்கள் , திண்டுக்கல், கரூர் மதுரை, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் ஏராளமான கண்மாய்கள் உள்ளது. இந்நிலையில் செங்கல் காளவாசல் நடத்தி வரும் உரிமையாளர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து கரம்பை மண் வாங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கரம்பை மண் இறக்குமதி செய்ய அதிக அளவில் செலவு அதிக அளவில் ஏற்படுவதால் செங்கல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம் வரை ரூ. 6 முதல் ரூ.6.50க்கு விற்பனையாகி வந்த செங்கல், தற்போது 7 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் புதிதாக வீடு கட்டுபவர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். செங்கல் விலை அதிகரிக்க கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக அதிக அளவில் செங்கல்களை வாங்கி இருப்பு வைத்து வருகின்றனர். விலை அதிகரித்தாலும் கரம்பை மண் இறக்குமதி செலவு அதிக அளவில் உள்ளதால் அதிக அளவில் லாபம் கிடைக்கவில்லை என செங்கல் காளவாசல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள பராமரிப்பு இல்லாத கண்மாய்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு செம்மண் சவுண்டு மண் அள்ளுவதற்கு விவசாயத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இதே போல் கரம்பை மண் அள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கினால் உற்பத்தி செலவு குறைந்து செங்கல் விலையும் குறையும். மேலும் மண் அள்ளுவதால் கண்மாய்களும் நீரை தேக்கி வைக்கும் வகையில் மாற்று விவசாயத்திற்கும் பயனளிக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, குமணன்தொழு, சிங்கராஜபுரம், மூலக்கடை உள்ளிட்ட கிராமங்களில் செங்கல் தயாரிக்கும் பணிகள் அதிக அளவில் நடைபெற்று வந்தது. செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் தயார் செய்யப்படும் செயல்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விலைவாசி உயர்வின் காரணமாக கூலி தொழிலாளிகளுக்கு அதிகளவில் சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சூளை அதிபர்கள் உள்ளார்கள் மேலும் கடந்த இரண்டு மாதங்களாக செங்கல் தயாரிக்கும் பணிகள் நடைபெறவில்லை.
இதனால் இந்த பணியை சார்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வருமானம் இன்றி உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே கூலி தொழிலாளர்கள் நலன் கருதி உரிய பாதுகாப்புகளுடன் செங்கல்களை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் நிலை உள்ளது. மேலும் உற்பத்தியும் பெரிய அளவில் இல்லை.

எனவே செங்கல் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி வழங்கிட வேண்டும். இதுதொடர்பாக வருசநாடு செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘செங்கல் தயாரிக்கும் பணிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். மேலும் எவ்வித பணியும் செயல்படாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் செங்கல் சூளை தொழிலில் நிரந்தர விலை கிடைக்க செய்ய வேண்டும். பாதிப்படைந்த சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Garambai ,Kadamalaikundu , Garambai soil shortage in Kadamalaikundu area causes sudden increase in brick prices: Government to provide relief to workers
× RELATED கடமலை அருகே கிணறு பைப்லைனை சேதப்படுத்திய யானைகள்