பில்லிக்கம்பை-சக்தி நகர் இடையே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை

கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள பில்லிக்கம்பை சக்தி நகர் பகுதிக்கு நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி அமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது. கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட பில்லிக்கம்பை சக்தி நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கட்டபெட்டு சென்று அங்கிருந்து  கோத்தகிரி,கு ன்னூர், ஊட்டி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகிறார்கள்.

இந்த சூழலில் சக்தி நகர் பகுதிக்கு சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலை தற்போது மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக  காட்சியளித்து வருகிறது. பொதுமக்கள்  மருத்துவம், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் குண்டும்  குழியுமான சாலையை பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்ப்பட்டு உள்ளதால் பொதுமக்கள்  மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.

மேலும் பழுதடைந்த சாலை இதுவரை சீரமைப்பு செய்யாததால் இரவு நேரங்களில் ஏதேனும் அவசர தேவைக்கு இவ்வழியாக செல்ல அச்சப்படவேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது. சாலை சீரமைக்கப்படாததால்  சாலையோரங்களில் உள்ள முட்புதர்கள் வளர்ந்து வனவிலங்குகளின் கூடாரமாக  மாறியுள்ள நிலையில், பகல் நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து  காணப்படுகிறது. சாலையை  சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்  பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வலுத்து வருகிறது.

Related Stories: