×

இணையதளம் முடங்கியதால் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க வேண்டும் : மதுரை சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை!!

மதுரை: இணையதளம் முடங்கியதால் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்டி டாஸ்கிங் (நான் டெக்னிக்கல்) ஸ்டாப் மற்றும் ஹவில்தார் (சி. பி.ஐ.சி , சி.பி என்) பதவிகளுக்கான ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

விண்ணப்ப கடைசித் தேதி 17.02.2023. ஆனால் நேற்று (15.02.2023) அதற்கான இணைய தளம் இயங்கவில்லை. இன்று சரியாகுமா என தெரியவில்லை. பல விண்ணப்பதாரர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இதில் தலையிட்டு தீர்வுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஸ்டாப் செலக்சன் கமிஷனுக்கும் இத்தகைய புகார்கள் நேரடியாக சென்றிருக்கும். எனவே உடனே இணைய தளத்தை சரி செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கடைசி தேதி நெருங்கும் வேளையில் இப்படி தொழில் நுட்ப பிரச்சினைகள் குறுக்கிட்டு இருப்பதால் நேர இழப்பை ஈடு கட்டும் வகையில் விண்ணப்ப கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும். ஸ்டாப் செலக்சன் கமிஷன் இயக்குனருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளேன். தீர்வு விரைவில் காணப்படுமென்று நம்புகிறேன்., இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : SSC ,Madurai Su Venkatesan , Website, SSC Examination, Time, Madurai, Su.Venkatesan
× RELATED டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி...