×

இணையதளம் முடங்கியதால் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

மதுரை: இணையதளம் முடங்கியதால் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். முடங்கியுள்ள www.ssc.nic.in  இணையதளத்தை விரைந்து சரி செய்ய சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இணையதளம் முடங்கியதால் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். ஒன்றிய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது.


Tags : S.S. ,Venkatesan , Website, SSC Examination, Time, S.Venkatesan M.P.
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...