சென்னை : தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டலில் ஓட்டுநர், நடத்துனருக்கு தனி அறையில் உணவு தரக்கூடாது என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. பயணிகளுக்கு வழங்கும் அறையிலேயே ஓட்டுநர், நடத்துநருக்கு உணவு வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.