×

வார்டு பொறுப்பாளரிடம் செல்போனில் கள நிலவரம் விசாரித்த மு.க.ஸ்டாலின்: தொண்டர்கள் உற்சாகம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக சார்பில் 32 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு அமைச்சர் அல்லது எம்எல்ஏ போன்றோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமும் திமுக அமைச்சர்கள் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 5வது வார்டு, திமுக மாணவரணி அக்ரஹாரம் பகுதி பொறுப்பாளர் ஹரி விக்னேஷுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் போனில் தொடர்பு கொண்டு, தேர்தல் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அது குறித்த உரையாடல் வருமாறு:

மு.க.ஸ்டாலின்: வணக்கம் நான் ஸ்டாலின் பேசறேன்.
ஹரி விக்னேஷ்: வணக்கங்கையா.
மு.க.ஸ்டாலின்: நீங்க எந்த பாகம் பாக்குறீங்க?
ஹரி விக்னேஷ்: 5வது பாகம்ங்கையா.
மு.க.ஸ்டாலின்: எப்படி இருக்கு நிலவரம் ?
ஹரிவிக்னேஷ்: நல்லா இருக்குங்கையா.
மு.க.ஸ்டாலின்: யார் பொறுப்பாளரா இருக்காங்க?
ஹரி விக்னேஷ்: வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்ங்க ஐயா. அப்புறம் பரங்கிபேட்டை ஒன்றிய நிர்வாகிகங்கையா.
மு.க.ஸ்டாலின்: எப்படி பண்றாங்க ?
ஹரி விக்னேஷ்: சிறப்பா பண்றாங்கையா. மக்கள் கிட்ட நம்மள பத்தி நல்ல ஒபீனியன் இருக்குங்கையா. கடந்த உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல்லயும் நம்ம வார்டுலதான் அதிக ஓட்டுங்கையா.
மு.க.ஸ்டாலின்: அப்படியா? நல்லது. நல்லா பாத்துக்கங்க, எல்லாரையும் விசாரிச்சதா சொல்லுங்க.
ஹரி விக்னேஷ்: சரிங்கையா
மு.க.ஸ்டாலின்: நல்லது. வணக்கம்.
ஹரிவிக்னேஷ்: நன்றிங்கையா.
இவ்வாறு அந்த உரையாடல் இருந்தது. திமுக பொறுப்பாளரிடம் தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் பேசி தேர்தல் பணிகள் குறித்தும், தொண்டர்கள் குறித்தும் அக்கறையுடன் விசாரித்திருப்பது கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : M.K.Stalin , Ward in charge, field situation on cell phone, inquired M.K.Stalin, volunteers excited
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்