×

திறந்தவெளி, நீர்நிலையில் வெளியேற்றுவதை தடுக்க அதிரடி உரிமம் பெற்ற வாகனங்கள் மட்டும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்: சென்னை குடிநீர் வாரியம் உத்தரவு

சென்னை: உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்கள் மட்டுமே கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்றும், அனுமதியின்றி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுக்கவும் மற்றும் முறையான சுத்திகரிப்பை உறுதிசெய்ய தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் (திருத்த) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 34/2022) கடந்த ஜனவரி 2ம்தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.  

அதன் அடிப்படையில், சென்னை குடிநீர் வாரிய உரிமம் பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் மட்டுமே உரிமம் பெற்ற கழிவுநீர் வாகனங்கள் மூலமாக கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.

எனவே, கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றுவதற்கான உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பெற்று நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சென்னை குடிநீர் வாரியத்தின் அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் உரிய சட்ட விதிகளின்படி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Chennai Drinking Water Board , Open space, Water body, Licensed vehicle, Sewage discharge, Chennai Drinking Water Board, Order
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...