சென்னை: பாமக தலைவர் அன்புமணி: தமிழ்நாடு அரசு, ஜேஇஇ கூட்டு நுழைவுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு தரப்பட்டது. அதே முயற்சி இப்போதும் மேற்கொள்ளப்பட வேண்டும். சியூஇடி நுழைவுத்தேர்வு மட்டுமின்றி, அடுத்து நடைபெறவுள்ள நீட் தேர்விலும் இதே சிக்கல் ஏற்படக் கூடும். எனவே, சியூஇடி மற்றும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து அரசு விலக்கு பெற வேண்டும்.
