×

பிப்.18 கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை மாநிலங்கள் சம்மதித்தால் பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: மாநிலங்கள் சம்மதித்தால் ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். டெல்லியில் தொழில்துறையினரிடையே நேற்று உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பது குறித்து மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால்  மட்டுமே செயல்படுத்த முடியும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. எனக்கு முன்பு நிதியமைச்சராக இருந்தவர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டு சென்றுள்ளார். எனவே அதை அமல்படுத்துவதில் கடினம் இல்லை.

மாநிலங்கள் ஒப்புக்கொண்டால் பெட்ரோலியப் பொருட்களையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவோம்.   ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் சனிக்கிழமை டெல்லியில் நடக்கிறது. அன்று மாநிலங்கள் தங்கள் சம்மதத்தை தெரிவித்தால் இது சாத்தியமாகும். மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்தவும் மாநிலங்களை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Finance Minister ,Nirmala Sitharaman , Feb 18 Council Meeting, Petrol, GST, Finance Minister, Info
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...