×

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் எஸ்.சி, எஸ்.டி விஞ்ஞானிகளுக்கு பதவி உயர்வில் பாகுபாடு: தொழில்நுட்ப வல்லுநர் திடீர் உண்ணாவிரதம்

சென்னை: சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக ஐயப்பன் பணியாற்றி வருகிறார். எஸ்.சி, எஸ்.டி விஞ்ஞானிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாகுபாடு உள்ளதாக குற்றஞ்சாட்டி ஐயப்பன் தொடர் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஐயப்பன் கூறியதாவது: 30 ஆண்டுகளாக எஸ்.சி, எஸ்.டி விஞ்ஞானிகளுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறேன். இந்த விவகாரம் குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தனை ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போது முன்பை விட சாதிய பாகுபாடு அதிகரித்தே காணப்படுகிறது.


Tags : Central Skin Research Institute , Discrimination in promotion of SC, ST scientists at Central Institute of Skin Research: Technician goes on hunger strike
× RELATED சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர்