சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த அதிகாரிகள், ஆளிநர்களுக்கு காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மற்றும் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.

1. மதுரவாயல் பகுதியில் இரவு நேரத்தில் நடந்த 2 திருட்டு வழக்குகளில் சில மணி நேரங்களில் 2 குற்றவாளிகள் கைது.

கடந்த 13.02.2023 அன்ற இரவு, மதுரவாயல், சன்னதி தெருவில் மளிகைக்கடை நடத்தி வரும் ஜான் கென்னடி என்பவரின் மளிகைக்கடை பூட்டை உடைத்து பணம் ரூ.4,000/- திருடப்பட்டது தொடர்பாகவும், மதுரவாயல் எம்.எம்டி.ஏ 5வது தெருவில் வசித்து வரும் அசோக்குமார் என்பவரின் இருசக்கர வாகனம் திருடு போனது தொடர்பாகவும், T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    

T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் P.சீனிவாசன் தலைமையில், முதல்நிலைக் காவலர்கள் G.குணசேகரன் (மு.நி.கா.33268), K.பாஸ்கர் (மு.நி.கா.28542) மற்றும் P.மணிகண்டன் (மு.நி.கா.37663) ஆகியோர் சம்பவயிடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த GPRS கருவி உதவியுடன் மேற்படி 2 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1.ஜீவா, வ/21, த/பெ.பிரபுகுமார், எண்.26/6, சைவமுத்தையா 2வது தெரு, இராயப்பேட்டை, சென்னை 2.அகிப் அகமது, வ/21, த/பெ.நசீர் அகமது, எண்.14, ஜானி ஜான் கான் ரோடு, இராயப்பேட்டை, சென்னை ஆகிய இருவரை நேற்று (14.02.2023) கைது செய்தனர். மேற்படி எதிரிகளிடமிருந்து ரொக்கம் ரூ.865 மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  

2. 2019ம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ.10,000/- விதித்து கனம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

கடந்த 2019ம் ஆண்டு தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, W-24 தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (W-24 Teynampet AWPS) போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 24 வயது எதிரியை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

இவ்வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், W-24 தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் .M.ஜோஸ்பின் லூர்து மேரி (தற்போது  CBCID - Metro Wing  காவல் ஆய்வாளர்) தலைமையில் நீதிமன்ற அலுவல் புரியும் பெண் தலைமைக்காவலர் .A.R.பத்மப்ரியா (WHC 27767) மற்றும் காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் கடந்த 23.01.2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேற்படி வழக்கில் எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மேற்படி 24 வயது குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000-அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

3. விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் பீரோவை உடைத்து தங்க வைர நகைகள் மற்றும் பணத்தை திருடிய நபர் 2 மணி நேரத்தில் கைது. சுமார் 9 சவரன் தங்க நகைகள், வைரக்கல் பதித்த நெக்லஸ் மற்றும் ரொக்கம் ரூ.28,000/- பறிமுதல்.

சென்னை, சாலிகிராமம், செங்கை ராஜுலூ தெரு, எண்.4 என்ற முகவரியில் வசித்து வரும் இந்திராகாந்தி, வ/47, க/பெ.தினேஷ்பாபு என்பவர் வீட்டின் கீழ்தளத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்திரகாந்தி கடந்த 10.02.2023 அன்று காலை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வீட்டிற்கு திரும்ப வந்து பார்த்த போது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து இந்திரகாந்தி R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில்,வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    

சென்னை பெருநகர காவல், விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் M.கார்த்திக் அழகன், R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவைச் சேர்ந்த பெண் தலைமைக்காவலர் S.மாரிச்செல்வி, (பெ.த.கா.43296), முதல்  நிலைக்காவலர்கள் G.கேசவன், (மு.நி.கா.28709),  D.சதீஷ், (T-4 கா.நி.) (மு.நி.கா.51047)  காவலர் T.கருப்பசாமி (கா.எண்.56452) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தும் , விரல் ரேகை பதிவு மற்றும் அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும் தீவிர விசாரணை செய்து மேற்படி திருட்டில் சம்பந்தப்பட்ட கருணா, வ/27, த/பெ.சுப்பிரமணியன், எண்.26/70, ஜீவானந்தம் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை என்பவரை குற்ற சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி வீட்டில் திருடிய சுமார் 9 சவரன் தங்க நகைகள், வைரக்கல் பதித்த நெக்லஸ் மற்றும் ரொக்கம் ரூ.28,000/- பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த 11 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று (15.02.2023) நேரில் அழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

Related Stories: