×

கனடா கோயிலில் மோடிக்கு எதிராக வாசகம்: இந்திய தூதரகம் கண்டனம்

டொராண்டோ: கனடாவில் இந்து கோயில்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. மிசிசாகாவில் உள்ள ராமர் கோயிலின் சுவர்களில், இந்தியாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அதில், ‘மோடியை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு டொராண்டோவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட பதிவில், ‘கோயில் சுவரில் எழுதிய நபர்களின் மீது கனடா அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் கூறுகையில், ‘இந்த சம்பவம் ஓர் வெறுப்பு தாக்குதல் ஆகும். இவ்விவகாரம் குறித்து தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.


Tags : Anti ,-Modi ,Canada ,Indian Embassy , Anti-Modi slogan in Canada temple: Indian Embassy condemns
× RELATED வடமாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை;...