தமிழர்கள் பெருமையை உலகறிய செய்யும் விதமாக நான் பணியாற்றுவேன்: சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை: தமிழர்கள் பெருமையை உலகறிய செய்யும் விதமாக நான் பணியாற்றுவேன் என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக கட்சி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தொண்டன் என்னும் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்கிறேன். மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்களின் நல்ல கருத்தையும் நமதாக்கிக் கொள்ள வேண்டும்.

நான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று எங்கேயும் பெருமையாக சொல்வேன். உலகத்தின் வல்லரசாய் பாரத தேசம் வளர்ந்திட வேண்டும் என்பது தான் நம் ஒரே சிந்தனையாக இருக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சிக்காகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மலைவாழ், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, வறுமையில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் எனக்கு கொடுத்த ஆளுநர் பதவியை பயன்படுத்துவேன். தமிழரின் பெருமையை உலகறியச் செய்வேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய, சி.பி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை சௌந்தரராஜன் என நாங்கள் ஆளுநராக சென்றுவிட்டாலும், தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் மகத்தாக பயணித்து புதிய சிகரங்களை தொடும். அண்ணாமலை சீறி வரும் சிங்கம், அவரை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இல்லை. தமிழரின் பெருமையை உலகறிய செய்யும் விதமாக நான் பணியாற்ற அனைவரின் அன்பும் பிரார்த்தனையும் தேவை என்று கூறினார்.

Related Stories: