×

காஞ்சிபுரத்தில் அம்மன் கோயில்களில் மகாபாரத பெருவிழா: துரியோதனன் படுகள நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று நேர்த்திக்கடன்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது. காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி மற்றும் திரவுபதி அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் மகாபாரத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் மகாபாரத திருவிழா தொடங்கியது. தினமும் சொற்பொழிவு, நாடகங்கள் நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகள நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதற்காக பிரமாண்டமான துரியோதரன் சிலை வடிவமைக்கப்பட்டு கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன், துரியோதனன் போரிடும் போர்க்கள காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது. பீமன் வேடமணிந்த ஒருவர் துரியோதனனை வாதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. துரியோதனன் படுகள நிகழ்ச்சியில் பிள்ளையார் பாளையம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று நேர்த்தி கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதி விழாவில் பங்கேற்றனர்.  


Tags : Mahabharata Festival ,Amman Temples ,Kanchipuram , Kanchipuram, Amman, temple, Mahabharata, Duryodhana, Padukala, program
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...