×

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸில் ஃபின்லாந்தின் எமில் -ஐ வீழ்த்தினார் டிசிட்சிபாஸ்

நெதர்லாந்து: நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸில் கிரேக்கத்திய சேர்ந்த முதல் நிலை வீரர் டிசிட்சிபாஸ் சற்று எளிதான வெற்றியோடு 2ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இப்போட்டி ரோட்டர்டாம் நகரில் நடைபெற்றுவருகிறது. உலக தரவரிசையில் மூன்றாம் இடத்தில இருக்கும். டிசிட்சிபாஸ் ஃபின்லாந் வீரர் எமில் ஐ முதல் சுற்றில் சந்தித்தார்.

 ரசிகர்களுக்கு விருந்து படைத்த முதல் செட் ஆட்டத்தில் டிசிட்சிபாஸ்க்கு கடும் சவால் தொடுத்தார் எமில் முடிவில் 5-7 என டைம்ப்ரேக்கரில் முதல் செட்டை இழந்த எமில் அடுத்த செட்டில் ஒரு கேம்-மை மட்டும் கைப்பற்றி தோல்வியை தழுவினார். மற்றொரு முக்கிய ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் ஸ்பெயின் நாட்டின் அலசன்ட்ரோவை எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டை 4-6 என இழந்து அதிர்ச்சியடைந்த மெட்வதேவ் அதன் பின்னர் இரு செட்களையும் 6-2 என கைப்பற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். கெனடாவின் அலியாசிமே 6-2, 6-3 என்ற கணக்கில் இத்தாலியின் லாரன்சோவை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.


Tags : Tsitsipas ,Emil ,Finland ,Rotterdam ,Open Tennis , Rotterdam Open Tennis, Finland, Dsitsipas defeats Emil
× RELATED சில்லி பாயின்ட்…