செஞ்சி: செஞ்சி ராஜகிரி கோட்டையில் பழமை மாறாமல் சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. செஞ்சிக்கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாக ராஜகிரி, சங்ககிரி கோட்டைகள் அமைந்துள்ளன. இக்கோட்டைகளை இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோட்டை அப்போது செங்கல் துகள்கள் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையால் கோட்டை சுவர்கள், தானிய களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இதனை அமைத்து பல ஆண்டுகளானதால் தற்போது சில இடங்களில் சுவர்கள் பழுதடைந்துள்ளது.இந்நிலையில் இந்திய தொல்லியல் துறை சார்பில் சுவர்களை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பழமை மாறாமல் அதே கற்களாலும் அதேபோன்று செங்கல் சுண்ணாம்பு கலந்த கலவையாலும் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று செஞ்சிக்கோட்டையில் பல்வேறு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
