×

பிபிசி மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் ஐ.டி சோதனை நடத்தியதற்கு மும்பை செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்

மும்பை: பிபிசி மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் ஐ.டி சோதனை நடத்தியதற்கு மும்பை செய்தியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டனை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நேற்று காலை 11.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விடிய விடிய நடத்திய சோதனையில் ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தபட்டன.  2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகளை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஒன்றிய அரசின் கருத்துக்களோடு உடன்படாத ஊடகங்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாக மும்பை செய்தியாளர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. ஊடகங்கள் மட்டுமல்லாது பணிபுரியும் ஊழியர்களின் வீடுகளிலும் ஐ.டி சோதனைகள் நடத்தப்படுவதாகவும், செய்தி ஊடகங்களை அச்சுறுத்தும் போக்கு ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களை அச்சுறுத்தும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என மும்பை பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


Tags : Mumbai Journalists Association ,BBC ,Mumbai ,Delhi , BBC, offices, IT probe, Mumbai Journalists' Association condemned
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!