×

திறந்த வெளியில் கிடக்கும் நெல் மூட்டைகள்: 5000 நெல்மூட்டைகள் வைக்க போதிய இடம் இல்லாததால் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் வேதனை

கும்பகோணம்: கும்பகோணம் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் போதிய இடம் இல்லாததால் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திருப்பனந்தாள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன் பெய்த மழையால் அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெயில் அடிப்பதால் அறுவடை பணிகள் வேகமெடுத்துள்ளது.

ஆனால் அங்குள்ள நுகர் பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொட்டகை வசதியின்றி திறந்த வெளியில் உள்ளது இதனால் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 5000 நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இந்த விவகாரத்தில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் உடனடியாக தலையிட்டு தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய விவசாயிகள் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : Open field, bundles of paddy, space, farmer's agony
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...