சென்னை: திருச்சி சூர்யா சிவா என்னுடன் மோதும் அளவிற்கு தகுதியானவர் இல்லை என்று வரிச்சியூர் செல்வம் கூறினார். பாஜவில் கட்சியில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா, வரிச்சியூர் செல்வத்துக்கு எதிராக ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ குறித்து, சென்னை தி.நகரில் வரிச்சியூர் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி சூர்யா சிவா என்னுடன் மோதும் அளவுக்கு தகுதியானவர் இல்லை. அவர் சின்ன பையன். அவர் என்னை ரவுடி என அழைக்கிறார், அவர் கூட சமீபத்தில் பேருந்து திருடினார். அதனால் அவரை நான் பஸ் திருடன் என அழைக்கலாமா.
மேலும், நானும் நடிகை காயத்திரி ரகுராமும் போட்டோ எடுத்தது பற்றி அவதூறு பரப்பி வருகிறார். அவர் எப்போதும் பெண்களுடன் தான் சண்டையிடுவார். அவர் என்னுடன் சண்டை போடும் அளவுக்கு தகுதி இல்லை. நான் 4 மாநில சிறை, 6 என்கவுன்டர்களில் இருந்து தப்பியவன். சூர்யா சிவா, என்னுடன் மோதுவது நல்லதல்ல. நான் இப்போது அந்த ரவுடியிசத்தை விட்டுவிட்டு திருந்தி குடும்பத்திற்காக வாழ்கிறேன். தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. நான் படம் ஒன்றை தயாரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.