×

சென்னை மாநகராட்சி சார்பில் கூவம் ஆற்றங்கரையோரம் மரக்கன்றுகள் நடும் பணி: மார்ச்சுக்குள் நிறைவடையும்

சென்னை:  சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில்  திருவிக நகர் பாலம் முதல் எம்ஆர்டிஎஸ் பாலம் வரை ரூ.5.4 கோடி மதிப்பில் நடைபாதை அமைத்தல், 60,000 மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை இடதுபுறத்தில் 3.9 கி.மீ. நீளத்தில் 16,955 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டிலும், வலதுபுறத்தில் 4 கி.மீ. நீளத்தில் 13,312 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டிலும் 13,456 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள்  நடந்து வருகின்றன. நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரையிலும், காயிதே மில்லத் பாலம் முதல் லஸ் பாலம் வரையிலும் கூவம் ஆற்றங்கரையோரம்  பாரம்பரிய மரக்கன்றுகளான அரச மரம், ஆலமரம், மகிழம், மலைவேம்பு, அசோக மரம், நொச்சி உள்பட 43 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரை ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் 14,300 மரக்கன்றுகள் நடும் பணிகளில் 4,300 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 59வது வார்டுக்குட்பட்ட கூவம் ஆற்றங்கரையோரங்களில் காயிதே மில்லத் பாலம் முதல் லஸ் பாலம் வரை ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் 2.12 கி.மீ. நீளத்திற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை சமப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைத்து 15,000 மரக்கன்றுகள் நடும் பணிகளில் 5,500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.  



Tags : Koovam river ,Chennai Corporation , Plantation of saplings along the Koovam River on behalf of the Chennai Corporation: To be completed by March
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்