ரசிகர்களுடன் பிரபாஸ் சந்திப்பு

ஐதராபாத்: ரசிகர்களை நடிகர் பிரபாஸ் சந்தித்து பேசினார். பாகுபலி 2 படத்துக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக பிரபாஸ் மாறிவிட்டார். தொடர்ந்து சாஹோ, ராதே ஷியாம் ஆகிய பான் இந்தியா படங்களில் நடித்த அவர், இப்போது சலார் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனுடன் காதல் கிசு கிசுவில் அவர் சிக்கினார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் என்று தகவல் பரவியது. ஆனால் இதை பிரபாஸ் மறுத்துவிட்டார்.ராதே ஷியாம் படத்தின்போது, ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கான போட்டி நடத்தப்பட்டது.

இதில் ரசிகர்கள் பலரும் பங்கேற்றனர். வெளிநாட்டு ரசிகர்களும் இதில் அடங்குவர். அதில் தேர்வு செய்யப்பட்ட ரசிகர்கள், பிரபாஸை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. பல்வேறு நாடுகள், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து ரசிகர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களை சந்தித்து பிரபாஸ் நீண்ட நேரம் உரையாடினார். அவர்களுடன் இரவு உணவும் அருந்தினர். பிறகு அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

Related Stories: