மாற்றுத்திறனாளி ரசிகரை நெகிழ வைத்த அல்லு அர்ஜுன்

ஐதராபாத்: மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தனது செயலால் நெகிழ வைத்திருக்கிறார் அல்லு அர்ஜுன். புஷ்பா படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் அல்லு அர்ஜுன். தற்போது விசாகப்பட்டினத்தில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்திப்பதை அல்லு அர்ஜுன் தவிர்ப்பது கிடையாது. புஷ்பா 2 படத்துக்கு இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் ஐதராபாத்தில் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தார் அல்லு அர்ஜுன். அப்போது மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வந்திருந்தார்.

அவரிடம் நலம் விசாரித்த அல்லு அர்ஜுன், நடக்க முடியாத அந்த இளைஞரை தனது கைகளால் தூக்கிக் கொண்டார். இந்த புகைப்படம் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது எதேச்சையாக நடந்தது. மீடியாவுக்காக இந்த புகைப்படம் எடுக்கப்படவில்லை. அதனாலேயே இந்த புகைப்படம் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகி்றனர்.

Related Stories: