×

இன்று 10, 12ம் வகுப்பு தேர்வு சாட் ஜிபிடிக்கு தடை: சிபிஎஸ்இ அதிரடி

புதுடெல்லி: நாடு முழுவதும் பத்து மற்றும் 12ம் வகுப்புக்களுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் இன்று தொடங்குகின்றது. இது தொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் நேற்று அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ‘‘10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொபைல், சாட்ஜிபிடி மற்றும் இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாது. சாட்ஜிபிடியை பயன்படுத்துவது தேர்வில் நியாயமற்ற வழியை பயன்படுத்துவதாக இருக்கும். எனவே மாணவர்கள் சாட்ஜிபிடியை அணுகுவதற்காக பயன்படுத்தப்படும் சாதனம் உட்பட எந்த எலக்ட்ரானிக் பொருளையும் தேர்வு மையத்திற்குள் எடுத்துவர அனுமதி இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட சாட்ஜிபிடியானது ஜெனரேட்டிவிவ் பிரீட்ரெய்ன்ட் டிரான்ஸ்பார்மர் எனும் செயற்கை நுண்ணறிவு செயலாக்கமாகும். பேச்சுக்கள், பாடல்கள், சந்தைப்படுத்துதல், நகல், செய்தி கட்டுரைகள், மாணவர் கட்டுரைகள் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து தரவேண்டிய முடிவை எடுத்தலாகும். சரியான அனுமானம் தரப்பட்டால் முழுஆய்வு அறிக்கையை சாட்ஜிபிடி வழங்கும். பள்ளி மாணவர்களின் பாடங்கள் முதல் கல்லூரி-பல்கலைக்கழக தேர்வு வரை அனைத்துமே இந்த தொழில்நுட்பத்துக்கு சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : CBSE , 10th, 12th class exam, sat gpt, ban, cbse action
× RELATED மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம்...