ஆண்டிபட்டி: வைகை அணையில் மாலை, மாங்கல்யத்துடன் வலம் வந்த இந்து இளைஞர் முன்னணியினரை கண்டு காதல் ஜோடிகள் தப்பியோடினர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு காதலர் தினத்தை முன்னிட்டு, நேற்று ஏராளமான காதல் ஜோடிகள் வந்திருந்தனர். அங்கு இந்து இளைஞர் முன்னணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் குமார் தலைமையில் நிர்வாகிகள், மாலைகள், மாங்கல்யத்துடன் வந்து காதல் ஜோடிகளை தேடினர். அங்கிருந்த காதல் ஜோடியினர் அவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடினர். அதே சமயம் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காதல் ஜோடிகளை வர விடாமல் வைகை அணை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
