சென்னை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் மீண்டும் வருவதற்கான காலம் வந்துவிட்டது என்று பழ நெடுமாறன் நேற்று முன்தின் தெரிவித்திருந்தார். அவரது அறிக்கை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவிவரும் நிலையில் பிரபாகரன் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி நேற்று பேட்டியளித்தார். அவர் கூறும்போது, ‘‘2009ம் ஆண்டு, இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்தார். அவர் உடல் அடையாளம் காட்டப்பட்டு, மரியாதையுடன் தகனம் செயப்பட்டது.
அவர் ஒரு இயற்கை போராளி. போர் குணம் மட்டுமே நிறைந்த தலைவர், மறைந்து வாழும் வாழ்க்கையை அவர் வாழ மாட்டார். அவர் மீது இரண்டு வழக்குகள் சென்னையில் நடந்தது. பாஜ தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் சென்று வந்தார். அங்கு உள்ள தமிழர்களுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம். இதன், பின்னால் இந்திய உளவுத்துறை, பாஜ சதி உள்ளது. இந்த சதியில் தமிழக தலைவர்கள் விலை போயுள்ளனர். பாஜவை வளர்க்க தான் இந்த சதி உருவாக்கப்பட்டுள்ளது. நெடுமாறன் இந்திரா காந்தியை காப்பாற்றறியவர்தான். அவர் பாஜவுடன் சேர்ந்து உள்ளார். அவர் பாஜவில் நேரடியாக தன்னை இணைத்து கொண்டுள்ளார்’’ என்று கூறியுள்ளார்.
