தென்னாப்பிரிக்காவில் இருந்து 18ம் தேதி 12 சிறுத்தைகள் ம.பி வருகிறது'

போபால்:பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 17ம் தேதிதனது 72வது பிறந்தநாளை கொண்டாடியபோது நமீபியா நாட்டின் 8 சிறுத்தை புலிகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார். தென் ஆப்பிரிக்காவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிறுத்தைகளை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. தற்போது 2ம் கட்டமாக 12 சிறுத்தை புலிகள் நமீபியாவில் இருந்து வரவுள்ளன. வரும் 18ம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் 12 சிறுத்தைகள் குவாலியர் வரவழைக்கப்படுகிறது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் குனோ தேசிய பூங்காவில் அவை விடுவிக்கப்படுகிறது.

இவற்றில் ஏழு ஆண் சிறுத்தைகளும், ஐந்து பெண் சிறுத்தைகளும் அடங்கும். வரும் வெள்ளிக்கிழமை மாலை தென்னாப்பிரிக்காவின் கவுடெங்கில் உள்ள டாம்போ சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை போக்குவரத்து விமானத்தில் 12 சிறுத்தை புலிகளும் புறப்படும். அடுத்த நாள் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படை தளத்திற்கு வந்து சேரும். அடுத்த 30 நிமிடங்களில் அவை ஷியோபூருக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட போமாஸில் (அடைப்புகளில்) வைக்கப்படும் என்று கேஎன்பி இயக்குனர் உத்தம் சர்மா தெரிவித்தார்.

Related Stories: