×

இருசக்கரவாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பயணித்த ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: இருசக்கரவாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பயணித்த ஓட்டுநர்களுக்கும், பின் இருக்கையில்  தலைக்கவசம் அணிந்து பயணித்த நபர்களுக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் விபத்துகளை குறைப்பதற்காக அமலாக்கம், கல்வி மற்றும் பொறியியல் மூலம் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால் கடந்த 01.01.2022 முதல் 12.02.2023 வரை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரல் ஹெல்மெட் அணியாததற்காக மொத்தம் 10,08,528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 9,50,702 வழக்குகள் வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மட் அணியாதவர்களுக்கும், 57,826 வழக்குகள் பின்னிருக்கையில் பயணம் செய்பவர்  ஹெல்மட் அணியாதவர்களுக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான விபத்துகளின் பகுப்பாய்வின்படி, 508 இறப்புகள் ஏற்பட்டுள்ளன  இவற்றில் 500 அபாயகரமான விபத்துகளில், 49.10% இறப்புகள் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களும் பின்னிருக்கையில் பயணம் செய்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அனைத்து சாலை பயனர்களும் மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் இதனால் விபத்துக்கள் ஏற்படுபதை குறைக்கலாம்.  

ஹெல்மட் அணியாமல் வாகன ஓட்டுபவர்களும் பின்னிருக்கையில் பயணம் செய்பவர்களும் சமமான ஆபத்தில் உள்ளனர் என்று ஆய்வுகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன, இதனால் பின்னிருக்கையில் பயணம் செய்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென சட்டமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபத்திய ஆய்வில், 85% ஓட்டுநர்கள் மற்றும் 13% பின்னிருக்கையில் பயணம் செய்பவர்களும் ஹெல்மெட் அணிந்துள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரின் அமலாக்க இயக்கம் தொடரும் என்றும் அதே வேளையில், ஹெல்மட் அணியாமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல், மோட்டார் வாகன விதியின்படி சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு தனது நன்றியையும் ஊக்கத்தையும் தெரிவிக்கிறது.

மேலும் சாலைப் பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் விதிக்கு இணங்குவதற்கான அவர்களின் பங்களிப்பிற்காக வாகன ஓட்டிகளுக்கும் பின்னிருக்கையில் பயணம் செய்பவர்களுக்கும்  பாராட்டுகள் தெரிவிக்கப்படுகிறது. இதையொட்டி, இன்று (14.02.2023) மதியம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலவகம், வேப்பேரி சிக்னல் சந்திப்பில், ஹெல்மெட் அணிந்து பயணம் செய்த ஓட்டுநர்களுக்கும், பின் இருக்கையில் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்தவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஹெல்மெட் அணியும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை பெருநகர காவல் எல்லை முழுவதும், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 100 பாராட்டுச் சான்றிதழ்கள் விதம் மொத்தம் 5,600 சான்றிதழ்கள் வழங்கப்படும். சான்றிதழ் பெறுபவர்கள் ஹெல்மெட் அணிவதைத் தொடரவும், மற்ற போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. சான்றிதழை சமூக ஊடகங்கள் மூலம் தங்களின் அருகிலுள்ளவர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் DP மற்றும் ஸ்டேட்டஸ் என பதிவிடவும் அவர்களிம் கோரப்பட்டது.

தங்களைப் போன்ற பொறுப்பான சாலைப் பயனாளர்களாக இருக்க வேண்டும் என்று அவர்களின் அருகில் உள்ளவர்களையும் அன்பானவர்களையும் கேட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டனர். இந்நிகழ்வில் போக்குவரத்து கூடுதல் காவல்துறை ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் மற்றும் போக்குவரத்து தெற்கு இணை ஆணையர் என்.எம்.மயில்வாகனன் , காவல் அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

Tags : Commissioner ,Shankar Jiwal , Commissioner of Police Shankar Jiwal awarded certificates of appreciation to motorcycle riders who wore helmets.
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...