×

குரோஷியாவில் இதயம் போல் காணப்படும் தீவின் ஒரு பகுதி விற்பனை

குரோஷியா: உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் குரோஷியாவில் இதயம் போல் காணப்படும் தீவின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரோஷியாவின் அட்ரியாடிக் பகுதியில் உள்ள இதய வடிவ தீவை காதலர் தீவு என்று சுற்றுலாப்பயணிகள் அழைத்துவருகின்றனர். கேலெஸ்ஞ்ஜாக் என்ற பெயர் கொண்ட இந்த தீவில் நட்சத்திர விடுதிகள் குடியிருப்புகள் இல்லை என்றாலும் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் விரும்பி செல்கின்றனர்.

அதனால் ஆண்டு தோறும் இங்கு 10 லட்சத்துக்கும் அதிகமான புகைப்படங்கள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 32 கிராமி விருதுகள் பெற்று சாதனை படைத்த அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியான பியோன்சே தனது 39 வது பிறந்த நாளை இதய வடிவத் தீவிற்கு சென்று கொண்டாடினார். இவர் ஒவ்வொரு ஆண்டும் இந்த தீவிற்கு சென்று சில வாரங்கள் தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் புகழ் பெற்ற முன்னாள் கூடைப்பந்து வீரரான மைக்கல் ஜோர்டன் உள்ளிட்ட பிரபலங்களும் கேலெஸ்ஞ்ஜாக் தீவுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் 1 லட்சத்து 42 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் 40 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் விற்பனைக்கு வந்துள்ளது. இதய வடிவிலான இந்த தீவை 115 கோடி ரூபாய்க்கு விற்க தயாராக இருப்பதாக உரிமையாளர் கூறியுள்ளார். விலை மதிப்பில்லா இதய வடிவ தீவை வாங்க ஆர்வமாக உள்ளதாக பலர் கூறினாலும். உரிமையாளரின் நிபந்தனைகளுடன் ஒத்துப்போக கூடிய வாடிக்கையாளர் இதுவரை அமையவில்லை. 


Tags : Croatia , Croatia, heart, island, sale
× RELATED குரோஷியாவின் ரீமாக் நிறுவனத்தின்...