ஒடிசாவில் சர்வதேச ரேடியோ கண்காட்சி: 3 ஆயிரம் விதமான ரேடியோக்கள் இடம்பெற்றன

ஒடிசா: ஒடிசாவில் சர்வதேச ரேடியோ கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியை உலக ரேடியோ தினமாக அறிவித்தது. 1946ஆம் ஆண்டு முதல் முறையாக ஐ.நா., ரேடியோ தொடங்கப்பட்ட நாளில் ரேடியோ தினமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. வானொலியின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, ஒடிசாவின் தலைநகர் புவனேஷ்வரில் சர்வதேச அளவிலான நூற்றுக்கணக்கான பழமையான ரேடியோக்களின் கண்காட்சி தொடங்கியது. சர்வதேச கண்காட்சியில் 3000 விதமான ரேடியோக்கள் இடம்பெற்றிருந்தன. இதை ஒட்டி ஒடிசாவின் புவனேஷ்வரில் 9ம் ஆண்டு சர்வதேச அளவிலான பழமையான ரேடியோக்கள் கண்காட்சி தொடங்கியது.

இதில் மர்பி, பிலிப்ஸ், கரார்ட், பில்கோ மற்றும் ஜெனித் உள்ளிட்ட பல நிறுவனங்களின் வானொலிப் பெட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இடம்பெற்றிருந்த 100 ஆண்டுகள் பழமையான ரேடியோக்கள் மற்றும் இசைத்தட்டு பெட்டிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். இந்த கண்காட்சியில் 3000 ரேடியோக்கள் இடம் பெற்றுள்ளன.இன்றுடன் நிறைவடையும் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர்.

Related Stories: