×

பிரபாகரன் குறித்த அறிவிப்பு: பழ.நெடுமாறனிடம் விசாரணை நடத்த உளவு பிரிவினர் முடிவு!

சென்னை: விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று கூறினார்.

சர்வதேசச் சூழலும், இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்றும், இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம் என்றும் கூறியிருந்தார்.

இருப்பினும், இலங்கை ராணுவம் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர். பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


Tags : Prabhakaran ,Intelligence Unit ,Phala.Nedumaran , Notification on Prabhakaran: The Intelligence Unit decided to investigate Phala.Nedumaran!
× RELATED போலீஸ் எனக்கூறி ரூ.67,000 பறிப்பு