×

விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த குண்டல புலியூர் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நடந்த கொடுமை: போலீசார் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள குண்டல புலியூர் கிராமத்தில் அன்பு ஜோதி என்ற ஆதரவற்றோர் ஆசிரமம் செயல்பட்டு வருகின்றது. அட்குணர்வு வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி கோட்டாட்சியர், டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் அந்த ஆசிரமத்திற்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது 30 பெண்கள் 27 பணியாளர்கள் உட்பட 184 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அங்கு இருந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதிர்ச்சி தகவலையும் விசாரணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அந்த ஆசிரமம் நிருவாகி ஜூபின் பேபி அவரது மனைவி மாறிய ஜூபின் மற்றும் பணியாளராகள் உள்ளிட்ட 6 மீது 13 பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆசிரமம் நிருவாகியும் அவரது மனைவியும் குரங்கு கடித்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.    


Tags : Kundala Puliyur ,Villupuram , Cruelty to mentally challenged women in Kundala Puliyur village next to Villupuram district: Police investigation
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...