திருமங்கலம்: மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை வழி ரயில் பாதை சோதனை ஓட்டத்தை பெங்களூர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். மதுரை தூத்துக்குடி ரயில்வே வழி தடத்தில் திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கும். மதுரையில் இருந்து திருமங்கலத்திற்கும் இரட்டை வழி ரயில் பாதை வழிகள் நிறைவடைந்துள்ளது. சோதனை ஓட்டம் நடைபெறும் போது ரயில் பாதை அருகே வசிப்போர் புதிய ரயில் பாதையை நெருங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கான சோதனை ஓட்டம் இரு வழி மார்க்கமாக 119.5 கிலோ மீட்டர் வேகத்தில் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தை பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபினை குமார் ராய் ஆய்வு மேற்கொண்டார். இந்த சோதனை ஓட்டத்தின் போது மதுரை ரயில்வே அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் சோதனை ரயிலில் அமர்ந்திருந்தனர். மேலும் நாளை இப்புதிய பாதையில் செய்யப்பட்டுள்ள மின்மயாக்கள் ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே. சித்தார்த்த ஆய்வு செய்ய உள்ளார்.
