×

நிறைமாத கர்ப்பிணியான ரிஹானாவின் 13 நிமிட நடனம்: 'சூப்பர் பவுல்'நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடிப்பாடி உற்சாகம்

அமெரிக்கா: பிரபல மேற்கத்திய பாடகி ரிஹானா 7 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் பவுல் நிகழ்ச்சியில் பங்கேற்றது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதே நேரத்தில் அவர் நிறைமாத கர்ப்பத்தோடு  பாடல்களை பாடி, ஆடியது விவாத பொருளாக ஆகியுள்ளது. மேற்கத்திய பாடகியான ரிஹானா 6 ஆண்டுகால இடைவெளிகளுக்கு பிறகு மீண்டும் மேடையேறி தனது வழக்கமான ஆட்டத்தையும், பாட்டத்தையும் வெளிப்படுத்தி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவின்  க்ளெண்டேல் நகரில் நடைபெற்ற சூப்பர் பவுல் 57 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தனது ஆட்டத்தின் இன்னொரு சுவாரஸ்யத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

34 வயதாகும் ரிஹானா தற்போது 2வது குழந்தையை தனது வயிற்றில் சுமந்தபடி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதையும் இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே ரசிகர்களுக்கு தெரிய படுத்தினார். சூப்பர் பவுல் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் உயரத்தில் மிதக்கும் கண்ணாடி மேடையில் நிறைமாத வயிற்றுடன் 13 நிமிடங்களுக்கு தொடர்ந்து பழைய கிளாசிக் ஹிட் பாடல்களை பாடியும், ஆடியும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

 ரிஹானா கர்ப்பமாக இருப்பதை அவரது நிகழ்ச்சி பிரதிநிதியும் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ரிஹானா தீ பற்றிக்கொண்டது. கடந்த ஆண்டு மே மாதம் தான் அவருக்கு முதல் குழந்தை பிறந்தது. அதற்குள்ளாக அவர் இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க தயாரானதும் அதை வயிற்றில் சுமந்தபடி இசை நிகழ்ச்சியில் ஆடியதும் பெரும் விவாத பொருளாகியுள்ளது.

2016ம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகளாக ரிஹானா இசை ஆல்பம் எதையும் வெளியிடாமல் இசை துறையில் இருந்து ஒதுங்கியே இருந்தார். 2005ம் ஆண்டு சூரியனின் பாடல் என்கிற ஆல்பத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைய தொடங்கிய ரிஹானா 250 மில்லியன் இசை தட்டுகள் விற்பனை என்கிற உலக சாதனையை படைத்தவர். 9 கிராமீ விருதுகள் உள்ளிட்ட பல்வேறு இசை உலக விருதுகளை பெற்றிருக்கிறார்.


Tags : Rihanna ,Super Bowl , A full month pregnant, Rihanna, 'Super Bowl' performance, singing excitement
× RELATED முடியாதுன்னு எதுவுமே இல்லை!