உலகளாவிய அன்பை செழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம் : கமல்ஹாசன்

சென்னை : உலகளாவிய அன்பைசெழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 14ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களுக்குள் பரிசுகளை பரிமாறிக் கொள்வதுடன், நேரில் சந்தித்து தங்கள் காதலையும் பகிர்ந்து கொள்கின்றனர்.இதனிடையே காதலர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம், சிறப்பு கவன ஈர்ப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உலகளாவிய அன்பைசெழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பதிவில், சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம். இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.

Related Stories: