அதிமுக டெபாசிட் இழக்கும் கோவை செல்வராஜ் உறுதி

திமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ஈரோட்டில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடந்த கூட்டத்தில் திமுக பற்றி பேசியுள்ளார். பாஜவிடம் கொத்தடிமையாக இருந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இது பற்றி பேசுவதற்கு எவ்வித தகுதியும் கிடையாது. தற்போது அதிமுகவை வழி நடத்துவதே பாஜதான். திமுகவின் 20 மாத கால ஆட்சியில் 20  ஆண்டு காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் உயர்வு, புதுமை பெண் திட்டம்,  இலவச பஸ் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. தமிழகத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும்  திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதிமுக மண் குதிரை. இந்த தேர்தலில் நிச்சயம் டெபாசிட் இழக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: