ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்காக எம்ஜிஆர் வேடமணிந்த கட்சி நபரும் திறந்த ஜீப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர், சாந்தான்காடு பகுதியில் ஜீப்பில் பேசியவாறு வந்தபோது, அவரைப் பார்க்கவோ, பேச்சைக் கேட்கவோ தெருவில் ஆட்களே இல்லை. அவரைக் கடந்து சென்ற நபரோ, “பாவம் எம்ஜிஆர பாக்க கூட ஆள் இல்லாத அளவுக்கு பண்ணிட்டாங்க... அவரோட ரத்தத்தின் ரத்தங்கள்...” என கமெண்ட் அடித்தவாறே சென்றார்.