×

கே.கே.நகர், மாம்பலம் பகுதிகளில் அடுத்தடுத்து 5 பேரிடம் செல்போன் பறிப்பு: கொள்ளையர்களுக்கு வலை

சென்னை: கே.கே.நகர், மாம்பலம் பகுதிகளில் பெண் உட்பட 5 பேரிடம் அடுத்தடுத்து செல்போன் பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அசோக்நகர் அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28). விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை ெசய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி தொடர்பாக ராஜா மன்னார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 வழிப்பறி கொள்ளையர்கள், முகவரி கேட்பது போல் நடித்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.

சிறிது நேரத்தில், கே.கே.நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ரேகா (30) என்பவரிடமும் அதே நபர்கள் செல்போன் பறித்து ெசன்றனர். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வாஸ்து நிபுணர் ராமலிங்க சாஸ்திரி (56) என்பவர், தனது வாடிக்கையார் ஒருவரை பார்த்துவிட்டு பேருந்துக்காக சாலிகிராமம் 80 அடி சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே நபர்கள், அவரிடமும் செல்போன் பறித்து சென்றனர்.

தாம்பரம் பகுதியை சேர்ந்த நந்தினி (26), மேற்கு மாம்பலத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல மாம்பலம் மகாதேவன் தெரு வழியாக தி.நகர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்ற போது, அவரது செல்போனையும், அந்த 2 வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

குறிப்பாக இரவு 8.45 மணி முதல் 9.30 மணிக்குள் இந்த கொள்ளையர்கள், கே.ேக.நகர், அசோக் நகர், மாம்பலம் பகுதிகளில் பெண்கள், முதியவர், வாலிபர்கள் என அடுத்தடுத்து 5 பேரிடம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர், அசோக் நகர், மாம்பலம் காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து அனைத்து இடங்களிலும் வழிப்பறி செய்தது ஒரு கும்பல் தான் என்று விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. அதைதொடர்ந்து வடபழனி உதவி கமிஷனர் பால முரளி மற்றும் அசோக் நகர் உதவி கமிஷனர் தனசெல்வம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.



Tags : KK Nagar ,Mambalam , KK Nagar, Mambalam areas cell phones stolen from 5 people in succession: net for robbers
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!