புனேவில் உள்ள கூகுள் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் கூகுள் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு 7.54மணியளவில் திடீரென அழைப்பு வந்துள்ளது. இதில் பேசிய மர்மநபர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து மிரட்டல் தொடர்பாக அலுவலக அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின்பேரில் போலீசார் உடனடியாக அலுவலகத்துக்கு விரைந்தனர். மேலும் வெடிகுண்டு   நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அலுவலகம் முழுவதும் சோதனையிடப்பட்டது. இதில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.  விசாரணையில் ஐதராபாத்தை சேர்ந்த நபர் மதுபோதையில் கூகுள் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: