×

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே: வைகோ அறிக்கை

சென்னை: தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்று அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று (13.02.2023) தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Tamil Eiladu ,National ,Prabhakaran , Happy if Tamil Eelam national leader Prabhakaran is well: VAICO report
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...