×

சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் எனக் கூறி ரூ.1.4 கோடி கொள்ளையடித்த வழக்கில் ரூ.70 லட்சம் மீட்பு..!!

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் எனக் கூறி ரூ.1.4 கோடி கொள்ளையடிக்கப்பட்டதில் ரூ.70 லட்சம் மீட்கப்பட்டது.  சென்னை, சவுகார்பேட்டையில் நகை வாங்க 1 கோடியே 40 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு இருவர் வந்துள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல், தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு வாகனத்தை சோதனை செய்துள்ளனர். பின்னர், அவர்களிடம் இருந்த 1 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்றனர். பிறகு தான் இது வழிப்பறி சம்பவம் என்பதை உணர்ந்த இருவரும், உடனடியாக யானைக்கவுனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை வைத்து இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவின் பெயரில் யானைக்கவுனி காவல் ஆய்வாளர் தலைமையில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.  இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய இம்ரான் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.70 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேலும் யார் யாருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தில் முதல் கட்டமாக 70 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : Chaugarpettai, Chennai , Chennai, Police, Rs 1.4 crore robbery, Rs 70 lakh recovery
× RELATED சென்னை சவுகார்பேட்டையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!!