சென்னை: தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் பட்டியலில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைஉள்ளிட்ட சில தர அளவுகோல்களை கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் தரவரிசை பட்டியலை தயாரிக்கிறது.
தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் அந்த அடிப்படையில் கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடர்ந்து முதலிடம் வகித்துவருகிறது. அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனை பொறுத்தவரை இங்கு மொத்தம் 34 துறைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 10,000 பேர் முதல் 16,000 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்நோயாளிகளாக 2500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். சாதாரண அறுவை சிகிச்சை தொடங்கி தீவிர அறுவை சிகிச்சை வரை ஒரு நாளில் சராசரியாக 130 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. தினசரி 50 பேர் வரை புற்றுநோய்கான கிமு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். 24 மணி நேரமும் டயாலிசிஸ் யூனிட் செயல்பட்டு வருகிறது.
ஒரு நாளில் நடைபெறும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை, குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை உயிரிழப்பு ஆகிய அனைத்து காரணிகளும் தரமதிப்பீட்டில் இடம்பெறுகின்றன. மற்ற மருத்துவமனைகளும் தர நிர்ணய மதிப்பீடுகளை பூர்த்திசெய்யும் போது தமிழ்நாடு மருத்துவக்கல்வி
இயக்குநரகத்தின் வரிசை பட்டியலில் முதல் இடம் பிடிக்க முடியும்.
