×

ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்க வேண்டும் : ஐ.ஜி. கண்ணன்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ATM கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 3 நாட்களில் பிடிபடுவார்கள் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் வெல்டிங் மிஷினை வைத்து நான்கு ஏடிஎம்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை தொடர்பாகத் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கொள்ளை சம்பவம் குறித்து கூறும் போது,திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களை நெருங்கியது தனிப்படை போலீஸ்.

ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படைகள் தீவிரம். 3 நாட்களில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்.கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேவையான அளவுக்கு தகவல் கிடைத்துள்ளது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் இருந்து சில தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறிப்பிட்ட வகையான ஏடிஎம் இயந்திரங்களில் மட்டும் தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வெளி மாநிலங்களில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது. தமிழ்நாட்டில் இது முதல்முறை. ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வரும் குறிப்பிட்ட நபர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.கோலார் தங்க வயல் ஏடிஎம் கொள்ளைக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

Tags : I.G. Kannan , ATM, Technology, I.G. Kannan
× RELATED என்கவுண்டரில் காயமடைந்த...