×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்தை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ்களுடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகலாம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்தை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ்களுடன் குறிப்பாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை ஆகியவற்றுடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் 98401 15857, 72992 64999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K.Stal ,Minister ,PK Shekharbabu , You can apply for free marriage on the occasion of Chief Minister MK Stalin's birthday: Minister PK Shekharbabu announced.
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து