×

ஜார்க்கண்ட் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஜார்க்கண்ட் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா ஆளுநர்): ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, தமிழக பாஜவின் மூத்த தலைவரும், நான் பெரிதும் போற்றும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது  மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு ஆளுநராக அவரது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்.முருகன் (ஒன்றிய இணை அமைச்சர்): பாஜ முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத்தலைவரால், ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியளிக்கிறது. அவரது தேச நலப்பணிகள் மென்மேலும் சிறக்க மனமார வாழ்த்துகிறேன்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): சி.பி.இராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டிருக்கிறது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. புதிய பொறுப்பில் அவர் சிறப்பாக செயல்படவும், அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அண்ணாமலை (பாஜக மாநில தலைவர்): ஜார்கண்ட்  மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜ முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜி.கே.வாசன் ( தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ): தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. மக்கள் நலன், மாநில நலன், தேசிய நலன் மிக்க சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பதால் தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்கிறது.
அன்புமணி ( பாமக தலைவர் ): ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் சி.பி. இராதாகிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  
சசிகலா: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு என் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களாகிய நம் அனைவருக்கும் மிகவும் பெருமை அளிக்கிறது.
ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்): பாஜ முன்னாள் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்.

Tags : Jharkhand ,Governor elect ,C. ,GP ,Raadhakrishnan , Political party leaders congratulate CP Radhakrishnan who has been elected as the Governor of Jharkhand
× RELATED ஜார்க்கண்டில் கடும் வறட்சி தண்ணீர்...