×

செந்துறை சந்திரகாசன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்

சென்னை: செந்துறை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சந்திரகாசன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பெரம்பலூர் மாவட்டம் செந்துறை வடக்கு  ஒன்றிய அதிமுக செயலாளர் சந்திரகாசன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கட்சியின் மீதும், தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு திறம்பட பணியாற்றி வந்த சந்திரகாசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Edappadi ,Senturai Chandrakasan , Edappadi mourns the death of Senturai Chandrakasan
× RELATED காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: எடப்பாடி கோரிக்கை