×

இளைஞர்களுக்கு நலவாரியம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல்வேறு வாரியங்களை அமைத்தது போல், இளைஞர்களுக்கும் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் 10 ஆண்டு காலமாக இளைஞர்களுக்கான சமூக சேவை இயக்கமாக செயல்பட்டு வருகிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சாதனை திட்டங்களை இளைஞர் சமுதாயத்திற்காக தொடர்ந்து அறிவித்து செய்து வருகிறார். பல்வேறு வாரியங்கள் திமுக ஆட்சியில் தான் அறிவிக்கப்பட்டது. இளைஞர் சமுதாயத்தில் அக்கறை கொண்ட தாங்கள் இளைஞர் நலன் வாரியத்தை அமைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தது இளைஞர் சமுதாயத்திற்கு மிகப்பெரிய சந்தோசம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் சமுதாயத்திற்கு இன்னும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை தமிழக இளைஞர்களிடத்தில் உள்ளது. உங்கள் பணிக்கு உறுதுணையாக என்றும் தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Udaiyanidhi Stalin , Welfare Board for Youth: Urge to Minister Udayanidhi Stalin
× RELATED சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான...