கார்த்தி சிதம்பரம் விபத்தில் சிக்கினார்

கிருஷ்ணராயபுரம்: திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திருச்சியில் இருந்து கரூருக்கு மினி பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது கரூரில் இருந்து மகாதானபுரத்துக்கு கார் ஒன்று சென்றது. எதிர்பாராத விதமாக காரும், மினிவேனும் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த மதன்குமார் (40) படுகாயம் அடைந்தார். அப்போது ஈரோட்டிலிருந்து தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், கும்பகோணம் சென்று கொண்டிருந்தார். மினிபஸ் மீது மோதிய கார், கார்த்தி சிதம்பரம் கார் மீதும் மோதியது. இதில் கார் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால், கார்த்தி சிதம்பரமும் டிரைவரும் காயமின்றி தப்பினர். பின்னர் கார்த்தி சிதம்பரம் மற்றொரு காரில் கும்பகோணத்துக்கு சென்றார்.

Related Stories: