×

அசாம் மாநிலம் நகான் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவு

அசாம்: அசாம் மாநிலம் நகான் பகுதியில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நகான் என்ற இடத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாலை 4.20 மணியளவில் அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிந்தது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்தியாவிலும் சில இடங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து இன்று 7 வது நாளாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பலி எண்ணிக்கை என்பது 28 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதையடுத்து நேற்று லடாக்கின் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அசாமின் நகான் என்ற இடத்தில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4 என பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் அசாமில் மாலை 4.20 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிந்துள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Assam State Nakaan , Earthquake in Nagaon, Assam: 4 on the Richter scale
× RELATED சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல்...