ஹாலிவுட் இளம் நடிகர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

டெக்சாஸ்: அமெரிக்காவில் இளம் நடிகர் கோடி லாங்கோ மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸில் வசித்து வந்த ஹாலிவுட் நடிகர் கோடி லாங்கோ (34), வீட்டில் இருந்த போது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் கோடி லாங்கோவின் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். உள்ளூர் நடன ஸ்டுடியோவில் பணியாற்றி வந்த அவரது மனைவி ஸ்டெஃபனி லாங்கோவை தொடர்பு கொண்ட போலீசார், கோடி லாங்கோவை அடையாளம் காணுமாறு அழைத்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ஸ்டெஃபனி வெளியிட்ட பதிவில், ‘கோடி லாங்கோவின் மரணத்தால், நானும் எனது குழந்தைகளும் நொறுங்கிப் போய்விட்டோம். அவர் சிறந்த  அப்பாவாகவும் சிறந்த கணவராகவும் இருந்தார். நாங்கள் எப்போதும் அவருடன் இருப்போம்’ என்றார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோடி லாங்கோவின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. அதனால், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: